வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (11:30 IST)

இன்னும் எங்களிடம் பல வீடியோக்கள் இருக்கிறது - வெற்றிவேல் பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார்.


 
20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். 
 
ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வெற்றிவேல் “தேர்தலுக்காக இந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை. நான் அவ்வளவு மலிவான நபர் கிடையாது.  இந்த வீடியோ போல்  எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. ஜெ.வை எங்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்கலாம் என அமைச்சர்கள் விவாதித்த வீடியோவும் எங்களிடம் இருக்கிறது. ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்-ஸ்க்கு தெரியும். ஜெ.வின் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் எங்களிடம் கேட்டால் அவர்களிடம் அனைத்து ஆதாரங்களையும் அளிக்க தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.