ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (16:27 IST)

பேசிக்கிட்டே வாகனம் ஓட்டுவோருக்கு இனி இந்த கதி தான்..?

பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவரின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை  கிளை கேள்வியெழுப்பியுள்ளது. 


 
கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநலன் சார்ந்த  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுபவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை 10,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
 
சமூக அக்கறை கொண்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட அவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிமன்றம் தடாலடியாக கேள்வி எழுப்பியது. 
 
இதனை கேட்டு சற்று நிமிடம் சிந்தித்து பின்னர் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.