1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. google officials will meet tn cm stalin soon

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

கூகுள் நிறுவன அதிகாரிகள்
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர் என்றும், சென்னையில் அமைய இருக்கும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க  முன்வந்துள்ளார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்  சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் என்று முதல்வர் ஏற்கனவே கூறிய நிலையில் கூகுள் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்தால் அது விரைவில் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!