செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:36 IST)

கைதிகளின் ஊதியப் பிடித்தம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளின் ஊதியத்தில் 50 சதவிகிதத்தை உடை மற்றும் உணவுக்காகப் பிடித்தம் செய்வது சட்ட விரோதமானது என்று கூறியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழக சிறைகளில் உள்ள ஆண் மற்றும் பெண் சிறைக் கைதிகளை வைத்து சிறைத்துறை நிர்வாகம் பல வேலைகளை செய்து வருகிறது. அதன் மூலம் வரும் வருமானத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தில் பாதியை கைதிகளின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவிகிதம் சிறைக் கைதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைக்காகவும் சிறைத்துறை நிர்வாகம் பிடித்தம் செய்கிறது. மீதமுள்ள 30 சதவீதம் மட்டுமே அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊதியப் பிடித்தம் தமிழகச் சிறை விதி 481-ன் கீழ் வருகிறது.

ஆனால் இந்த விதி தமிழகத்தைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் பின்பற்றப் படவில்லை. எனவே இந்த விதியினை நீக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் விதியைச் சட்ட விரோதமானது என அறிவித்து அதை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ‘கைதிகளின் ஊதியத்தில் உணவு மற்றும் உடைக்காக பிடித்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறை விதி எண் 481 அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கைதிகள் ஊதியத்தில் நியாயமான தொகையையேப் பிடித்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.