ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (10:55 IST)

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


 
டாஸ்மாக் விற்பனை நேரத்தை  மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது டாஸ்மாக் கடை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.  
 
இந்நிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என கோரியுள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.