1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (08:44 IST)

தமிழக வெற்றிக் கழக மாநாடு எப்போது? இன்று தேதியை அறிவிக்கும் விஜய்!? - தொண்டர்கள் காத்திருப்பில்..!

Vijay Flag

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ள தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

நடிகர் விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதற்கான கொடியையும் சமீபத்தில் வெளியிட்டார். தற்போது த.வெ.க கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், வரும் 28ம் தேதி கட்சி மாநாடு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.

 

இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 85 ஏக்கர் நிலப்பரப்பை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். அங்கு மாநாடு நடத்த அனுமதி அளித்திட வேண்டி த.வெ.க. கட்சியினர் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 

 

ஆனால் மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாக மாநாடு ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை காவல்துறை த.வெ.க கட்சியினருக்கு முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு நேற்று முன் தினம் விஜய் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து இன்று மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற உள்ளதாகவும், அதன்பின்னர் மாநாடு தேதியை நடிகர் விஜய் இன்றே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய்யின் த.வெ.க கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K