புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (12:59 IST)

படிக்கணும்னுதான் ஆசை! டிவி நிகழ்ச்சியில் அழுத சிறுவன்..! அரை மணி நேரத்தில் நடிகர் விஜய் செய்த சம்பவம்!

TVK helps a poor boy

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் சிறுவன் ஒரு படித்துக் கொண்டே வேலை பார்ப்பது பற்றி அழுதுக் கொண்டே பேசியிருந்த நிலையில் அதை பார்த்த நடிகர் விஜய், அந்த சிறுவனுக்கு உடனடியாக பல உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

 

 

சமீபத்தில் வெளியான மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படத்தை முன்வைத்து, படித்துக்கொண்டே வேலை பார்க்கும் சிறுவர்கள் குறித்த விவாதம் விஜய் டிவி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் நேற்று நடந்தது. அதில் ஒரு சிறுவன் தான் படித்துக் கொண்டே வேலை பார்ப்பது குறித்து பேசியபோது “வேலை முடிஞ்சு 3 கிலோ மீட்டர் நடந்தே வீட்டுக்கு போவேன் சார். அப்போலாம் யோசிச்சிட்டே போவேன். என் அம்மாவை நல்லா பாத்துக்கணும். இன்னும் பெரிய எடத்துக்கு போயி அம்மாவுக்கு வேண்டிய எல்லாம் செய்யணும்.

 

தரையில படுக்காம அம்மா படுத்துக்க ஒரு நல்ல பெட் வாங்கி தரணும்னுலாம் ஆசையா இருக்கு” என பேசியபடி கண்கலங்கி இருந்தார்.

 

அந்த நிகழ்ச்சியை பார்த்த நடிகர் விஜய், உடனடியாக த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டு அந்த சிறுவனுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி அரை மணி நேரத்திற்குள் அந்த சிறுவன் ஆசைப்பட்ட படியே அவனது தாயாருக்கு பெட், வீட்டிற்கு மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர், சிறுவனின் கல்லூரி படிப்புக்காக ரூ.25 ஆயிரம் பணமும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து அந்த குடும்பத்தினர் தங்கள் நன்றிகளை விஜய்க்கு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K