ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:19 IST)

அதிக உறுப்பினர்களை சேர்த்தால் சிறப்பு பரிசு! மாநாட்டில் மாஸ் காட்ட த.வெ.க ப்ளான்?

Vijay Speech

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரம் எடுத்து வருகிறது.

 

 

நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என கட்சி பெயரையும் அறிவித்திருந்தார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது இரண்டு பக்கம் யானைகள், நடுவே வெற்றியைக் குறிக்கும் வாகை பூ, மஞ்சள், சிவப்பு நிறம் கொண்ட அந்த கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.

 

அதை தொடர்ந்து செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த மாநாட்டில் அதிகமான த.வெ.க உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என நடிகர் விஜய் எதிர்பார்க்கிறார்.
 

 

இந்நிலையில் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் அதிகமான உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமென த.வெ.க தலைமை தெரிவித்துள்ளது. மாநாட்டிற்குள் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்களுக்கு மாநாட்டில் வைத்து நடிகர் விஜய் சிறப்பு பரிசுகளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் மாநாடு என்பதால் முடிந்தளவு அதிகமான கூட்டத்தை காட்ட த.வெ.க முயன்று வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K