திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (23:11 IST)

சசிகலா குடும்பத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் - தீர்மானம்

கரூரில் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை ஒருபோதும்  அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
கரூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் எ.ஆர்.காளியப்பன் தலைமையில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.  
 
இதில் சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்களுக்கு மாறாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் தயவு தாட்சண்யமின்றி தலைமை கழகத்தின் மூலமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்நிகழச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் தொகுதி செயலாளர் திருவிக, மாவட்ட துணை செயலாளர் சசிகால ரவி,  மாவட்ட இணை செயலாளர் சித்ரா, கரூர் மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் விசிகே ஜெயராஜ், வடக்கு நகர செயலாளர் பாண்டியன், குளித்தலை ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் ,நகர கழக செயலாளர்கள், ஒன்றிய கழக  செயலாளர்கள் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.