1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala spack with admk follower

எல்லாம் தப்பா இருக்கு.. எப்போம்மா வருவீங்க? – தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன சசிக்கலா!

Tamilnadu
அதிமுகவை சீக்கிரம் சசிக்கலா நிர்வகிக்க வர வேண்டும் என தொண்டர்கள் பேசியுள்ளதற்கு சசிக்கலா ஆறுதல் கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்து அதிமுக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உள்ள நிலையில், கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்து வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. முக்கியமாக அதிமுக முக்கிய நபர்களோடு சசிக்கலா போனில் பேசி வருவது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலரை அதிமுகவிலிருந்து நீக்கி ஈபிஎஸ் – ஓபிஎஸ் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் திருவாரூரை சேர்ந்த அதிமுக தொண்டரிடம் சசிக்கலா பேசியபோது அந்த தொண்டர் கட்சியில் எல்லாம் தவறாக நடப்பதாகவும் சீக்கிரமாக சசிக்கலா வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து பேசியுள்ள சசிக்கலா “எம்ஜிஆர் மறைந்த பின்னர் அம்மாவை (ஜெயலலிதா) இப்படியாகதான் ஒதுக்க பார்த்தார்கள். ஆனால் அவர்களின் சசித்திட்டத்தை முறியடித்து அம்மா கட்சியை காப்பாற்றி நல்லாட்சி அளித்தார். அதுபோல நானும் விரைவில் கட்சியை மீட்டு தொண்டர்களை காப்பேன்” என பேசியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது: மூடி மறைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள்!