இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் 11 பேர்களுக்கு இரங்கல் தீர்மானம்: யார் யாருக்கு?

TN assembly
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் 11 பேர்களுக்கு இரங்கல் தீர்மானம்: யார் யாருக்கு?
siva| Last Updated: செவ்வாய், 22 ஜூன் 2021 (07:59 IST)
16வது சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடிய நிலையில் நேற்றைய முதல் நாளில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உரையாற்றினார். இந்த உரையில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் கடந்த ஒன்றரை மாதத்தில் திமுக அரசு செய்த சாதனைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன
தமிழக கவர்னர் உரைக்கு ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதும் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று 2-வது நாளில் சட்டப்பேரவையில் 11 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், எழுத்தாளர் கி ராஜநாராயணன், நடிகர் விவேக் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது

அதேபோல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மற்றும் முதலாவது சட்டப்பேரவையின் உறுப்பினர் டி எம் டி என் அண்ணன் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதேபோல் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :