புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (13:34 IST)

தொண்டர்கள் மத்தியில் சாதிய ரீதியில் பேசும் சசிகலா - அதிமுக கண்டனம்

சாதிய ரீதியில் பேசி அதிமுக தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக சசிகலாவுக்கு எதிராக கோவை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அவைதலைவர் ஏ.வெங்கடாசலம் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் கே அர்ஜுன், வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டானர். 
 
இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக வி.கே.சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக ஊடகங்கள் மூலம் பகிரங்கமாக அறிவித்தார். சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பின் கட்சி வலுவாக இருப்பதை பார்த்து, அரசியல் ஆதாயம் தேடி கொள்ள சிலருடன் தொலைப்பேசியில் பேசுவது போல் நாடகம் ஆடுவதை கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
மேலும் சசிகலா சாதிய ரீதியாக பேசி அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும்,  தங்களை வளப்படுத்திக் கொள்ள ஒரு குடும்பத்தினர் கட்சியை அபகரிக்க முயல்வதாகவும், அதிமுகவிற்குள் குழப்பை ஏற்படுத்தும் வகையில் வி.கே.சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கியதை, கோவை மாவட்ட அதிமுக வரவேற்பதாகவும், அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக சசிக்கலாவுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.