1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (15:50 IST)

வைரமுத்துவுக்கு பட்டம் வழங்கும் நிகழ்வு ரத்து ... அரசியல் அநாகரீகம் - சீமான்

சமீபத்தில், ஒரு தனியார் பல்கலைகழகம் கவிஞர் வைரமுத்துவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இப்பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியும் டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ரத்து செய்துள்ளது. மீண்டும் பட்டமளிப்பு விழா வேறு நாளில் நடைபெறுமா என்பது தெரியாத நிலையில், இதுகுறித்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மதிமுக செயலாளர் வைகோ, “வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்திருந்தால் ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை கூடியிருக்கும்” என கூறியுள்ளார். 
 
இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
இவ்விழாவைப் புறக்கணித்துத் தனக்குக் கிடைக்க இருந்த பேறையும், பெருமையையும் இழந்துவிட்டார் ராஜ்நாத் சிங்! தொடர்ந்து தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிற மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது!
 
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் புறக்கணித்தது அரசியல் அநாகரீகமான செயல்! விருதுகளால் ஐயாவுக்குப் புதிதாக எவ்விதப்பெருமையும் சேரப்போவதில்லை.ஐயாவின் கரங்களின் தவழ்வதால்தான் அவ்விருதுக்குப் பெருமை!  என தெரிவித்துள்ளார்.