முழு ஊரடங்கு அமல்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார்: தமிழக வணிகர் சங்க பேரவை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று மட்டும் 1407 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சென்னையில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா அவர்கள் ’சென்னையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில் அரசு அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தினால் கூட கடைகளை அடைத்து அரசுகளுக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்
எனவே சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால், வணிகர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதும், எத்தனை நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறதோ, அத்தனை நாள் கடைகள் எதுவும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது