1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (16:54 IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தி மருமகள் போட்டியா?

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஜூலை 10-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பரிசீலனை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட புகழேந்தி 93 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென காலமானதால் தற்போது இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா பெயர்கள் பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 
மேலும் மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தியின் மருமகள் பிரசன்னா தேவியும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவர் விக்கிரவாண்டி  தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran