தொடர்புடைய செய்திகள்
- தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி முகம்..! தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!
- வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அதிமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் புகார் மனு!
- கோவையில் அண்ணாமலை பின்னடைவு.. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை..!
- காவேரி கூக்குரல் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 4.5 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! அமைச்சர் கீதாஜீவன் துவங்கி வைத்தார்!
- வைகோவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விரைவு..!
தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி.. வித்தியாசம் சுமார் 3 லட்சம் வாக்குகள்..!
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளதாக சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் வாக்கு வித்தியாசம் சுமார் மூன்று லட்சம் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி தொகுதியின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 426617 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி என்பவர் 123214 வாக்குகள் பெற்றுள்ளார் என்பதும் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 303403 என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 101065 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் சீலன் 93869 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
