செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (21:41 IST)

விஜயகாந்த் மைத்துனர் சுதீஸ் மருத்துவமனையில் அனுமதி !

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, தேமுதிக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.

இந்நிலையில் தேமுதிக, கட்சி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடவுள்ளது. தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தேமுதிக துணைச்செயக்லர் சுதீஸ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.