திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (15:54 IST)

ஜெயேந்திரரின் மறைவையடுத்து காஞ்சி மடத்தின் மூத்த மடாதிபதியாகிறார் விஜயேந்திரர்

உடல்நலக் குறைவால் ஜெயேந்திரர் காலமானதையடுத்து காஞ்சி மடத்தின் 70-ஆவது  மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்கப்போகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
 
இந்நிலையில் இன்று காலை சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
 
காஞ்சி மடத்தின் 68-ஆவது மடாதிபதியாக இருந்த மகாபெரியவர் காலமானதையடுத்து, காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக இருந்த சங்கராச்சாரியார் 1994 ஆம் ஆண்டு  69-ஆவது  மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
 
தற்பொழுது  சங்கராச்சாரியார் மரணமடந்ததையடுத்து, காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பு வகித்த விஜயேந்திரர் 70-ஆவது மடாதிபதியாக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
சங்கராச்சாரியார் மறைவிற்கு பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.