1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 மே 2024 (21:03 IST)

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

கடந்த சில நாட்களாக போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் காவல் துறை ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இதற்கு தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து சங்கங்களின் சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் காவலர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்ய செய்த போது டிக்கெட் எடுக்க மறுத்தார். அப்போது அவருக்கும் நடத்துனருக்கும் இடையே மோதல் முற்றியது. இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய முடியும் என்று போக்குவரத்து துறை தெரிவித்தது.
 
இதற்கு பதிலடியாக காவல்துறை அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி விதிகளை மீறியதாக அபராதம் விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்துக்கு கழகத் தொழிலாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளது. 
 
இருதரப்பு அலுவலர்கள், தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மீது அபராதம் விதித்து வருவதாகவும் அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Siva