காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!
16 வயது சிறுமி, 14 வயது சிறுவனை காதலித்த நிலையில் காதல் தோல்வி காரணமாக இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி கடந்த ஏழு மாதங்களாக காதலித்து வருவதாக தெரிகிறது. இருவருக்கும் டியூஷன் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னும் இருவரும் காதலித்ததாகவும் கூறப்படும் நிலையில் திடீரென காதலில் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் கைகளில் துப்பட்டாவால் கட்டிக் கொண்டு கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திருவொற்றியூர் கடல் பகுதியில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்து செய்யப்பட்டு வருகிறது.
16 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva