ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (07:57 IST)

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அதிரடியாக மாற்றம்

தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி திடீரென மாற்றப்பட்டு, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற ராஜேஷ் லக்கானி 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலை சிறப்பாக நடத்தினார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு ராஜேஷ் லக்கானி  கடிதம் எழுதினார்.
 
இதையடுத்து சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவி வகிக்கும் ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டதைச் சேர்ந்த சத்யபிரதா சாஹூ என்பவர் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சத்யபிரதா சாஹூ மாநில போக்குவரத்து கமிஷனர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.