விஜயபாஸ்கரும் என்னை சந்தித்து பேசினார் - அடுத்த குண்டை வீசிய தினகரன்

Updated: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (17:50 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னை சந்தித்து பேசியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து இறக்கி, தான் அந்த பதவியில் அமர வேண்டும் என்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ்- மற்றும் தனக்கும் நெருக்கமான ஒரு நபர் மூலம் சந்திப்பு நடந்தது. அவர் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பினார் என தினகரனும் ரகசியத்தை உடைத்து பேட்டி கொடுக்க தற்போது இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், அவர் மனம் மாறியிருப்பார் என நினைத்தே தினகரனை சந்தித்து பேசினேன் என ஓ.பி.எஸ் விளக்கம் அளித்திருந்தார்.
 
இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ஓபிஎஸ் மட்டுமல்ல. நான் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை சந்தித்து பேசினார்” என அடுத்த குண்டை வீசியுள்ளார்.
 
இந்த விவகாரமும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

எதுக்கு வந்தீங்க?!.. சீன் போடப்போன ஜூலி!.. விரட்டி அடித்த போராட்டக்குழு!..

இந்த ரெண்டையும் செய்யணும்!.. போராட்டம் தொடரும்.. CJP அபிஜீத் தீப்கே திட்டவட்டம்!..

திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

அரசியலில் இருந்து விலகுகிறேன்!. இனிமே அன்புமணி மட்டும்தான்!.. ராமதாஸ் அறிவிப்பு..

பணிந்தது பாஜக!.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா!.. இளைஞர்களின் போராட்டம் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments