செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (10:36 IST)

விஜய் வெளியிடும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா.. திருமாவளவன் கலந்து கொள்கிறாரா?

விஜய் வெளியிடும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விகடன் பிரசுரம் வெளியிடும் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற நூல் வெளியீட்டு விழா டிசம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார்கள் என்று முன்பே தகவல் வெளியிடப்பட்டது.

ஆனால், இப்போது வந்துள்ள அழைப்பிதழின் அடிப்படையில் திருமாவளவன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. விழாவில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுவார் என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

மேலும், விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவா பா. சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைத் தலைவர் ஆதவா அர்ஜுனா, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு, மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில், திருமாவளவன் இந்த விழாவில் பங்கேற்காதது உறுதியாகியிருக்கிறது.விஜய் வெளியிடும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்காதது உறுதி



Edited by Mahendran