வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (15:07 IST)

உயிரிழந்த தொண்டர்கள் குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி! வெளியே சொல்லாமல் நடத்த திட்டம்?

Vijay

சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பலியான தொண்டர்களின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் நிதியுதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக கடந்த அக்டோபர் 27ம் தேதி நடத்தினார். இந்த கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனங்களில் வந்த சிலர் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் பலியான சம்பவமும் நடந்தது.

 

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பலியானது குறித்து நடிகர் விஜய் அப்போதே வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், இந்நிலையில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் அதை பொதுநிகழ்ச்சியாக நடத்தாமல் தனிப்பட்ட நிகழ்வாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார சூழலை பொறுத்து உதவிகளை அவர் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K