மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான வாழை இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்கு மூலமாகவே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் அவர் தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோருக்குக் கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனுஷூக்காக அவர் சொன்ன கதை அதிக பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் அடுத்து கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதன் பின்னர் இந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.