மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள்: விஜய்
மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள் என தவெக கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவங்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா? நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பிய விஜய், பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான் என்றும் அவர் தெரிவித்தார்.
வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை, இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என கூறிய விஜய் Extra Luggage-ஆக நான் இங்கு வரவில்லை. உங்களில் ஒருவனாக இருந்து உழைப்பதே என் Target. ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்"
பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள், மகத்தான அரசியல் என்றால், மக்களுக்கான அரசியல் தான் என்று விஜய் தெரிவித்தார்.
Edited by Siva