வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (15:40 IST)

தொடங்கியது தவெக மாநாடு.. இன்னும் சில நிமிடங்களில் வருகிறார் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்று வரும் நிலையில், கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிறதால், திட்டமிட்ட நேரத்தை விட முன்கூட்டியே மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 
 
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சில நிமிடங்களுக்கு முன் தொடங்கியதாகவும், இன்னும் சற்று நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேடைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டு, மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தொடங்கியதையடுத்து தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருவதாகவும், முதல் கட்டமாக மேடைக்கு விஜய்யின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோர் வருகை தந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் நடித்த படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வரும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் மேடைக்கு வருவார் என்றும் அதன் பிறகு தலைவர்கள் பேசத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும், இந்த கட்சியில் இணைய இருக்கும் பிரபலங்களும் வருகை தந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயில் அதிகமாக இருப்பதனால் திடலுக்கு வந்த தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் அவதிப்படுகின்றனர், எனவே விரைவில் மாநாடு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால், திட்டமிட்ட நேரத்தை விட முன்கூட்டியே மேடைக்கு தலைவர்கள் வரத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Siva