வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (11:21 IST)

தைரியமிருக்குறவங்க நிஜத்திலும் அரசியல் பேசணும்: விஜய்யை வம்பிழுத்த பிரபல நடிகர்

சினிமாவில் மட்டுமில்லாமல் தைரியமாக நிஜத்திலும் அரசியல் பேச வேணும் என்று பிரபல நடிகர் கூறியுள்ளார்.
இயக்குனர் முருகதாஸ் - நடிகர் விஜய் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில்  அரசியல் வாதிகளைப் பற்றி வீரவசனம் பேசிய விஜய்யும், படக்குழுவினரும் அவர்களின் மிரட்டலுக்கு பயந்துபோய் படத்திலிருந்த சர்ச்சைக் காட்சிகளை நீக்கிவிட்டனர். இவர்கள் எல்லாரும் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக பேசி நன்றாக பணம் சம்பாதித்து விட்டனர். 
 
படத்தைப் பார்த்த சில  பல ஆர்வக் கோளாறுகள் தங்கள் வீட்டிலிருந்த மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை தூக்கி போட்டு உடைத்தனர். இதனால் விஜய்க்கோ, முருகதாஸுக்கோ, சன்பிக்சர்ஸ்க்கோ 10 பைசா கூட நஷ்டமில்லை. இவர்கள் விளையாட்டில் முட்டாளாக்கப்பட்டது மக்களாகிய நாம் தான். 
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் சர்கார் படம் குறித்து குறித்து பேசிய போது சினிமாவில் மட்டுமில்லாமல் தைரியமாக நிஜத்திலும் அரசியல் பேச வேணும் என கூறியுள்ளார். படத்தில் அரசியல் பேசுவது மக்களை திசை திருப்பவே என கூறியுள்ளார்.