திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 21 நவம்பர் 2018 (15:05 IST)

பிரான்ஸில் சர்கார் சூப்பர் சாதனை!

தளபதி விஜய் நடிப்பில் நவம்பர் 6ம் தேதி தீபவாளியை முன்னிட்டு வெளியானது சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இந்த சர்கார் படத்தில்  நிகழ்கால அரசியல் நேரடியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. 
 
இதனால் ஆளும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்ததால் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு பின்னர் திரையிடப்பட்டது. இதற்கிடையே போராட்டங்கள் காரணமாக சர்கார் படத்துக்கு பெரும் விளம்பரம் கிடைத்தது. இதனால் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதும், பல ஆயிரம் பேர் திரையரங்கில் சென்று சர்கார் படத்தை பார்த்தனர்.

இதனால் இரண்டு வாரத்தில்  200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது சர்கார். வெளிநாடுகளிலும் வசூலில் சர்கார் சக்கை போடு போட்டு வருகிறது.  3வது வாரத்தை கடந்து சர்கார் திரைப்படம் பிரான்ஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, நைட் ஈடி பிலிம்ஸ் பிரான்ஸில் சர்கார் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சார்கார் திரைப்படம் மூன்றாவது வாரத்தை கடந்து ஓடுவதை பெருமையாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

பிரான்ஸில் வசூலில் டாப் 4வது இடத்தை பிடித்த தமிழ் படம் சர்கார்  என்ற பெருமையை பெற்றுள்ளது,