சர்காரை விட சீமராஜா தான் லாபம் தந்தது: பிரபல திரையரங்கு உரிமையாளர் பேட்டி

VM| Last Updated: சனி, 24 நவம்பர் 2018 (10:46 IST)
சர்கார் படம் தீபாவளி அன்று திரைக்கு வந்தது. வசூலில் பெரும் சாதனை படைத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள பிரபல பிரபல திரையரங்கு ஒன்றின் உரிமையாளர்  சர்கார் வசூல், சீமராஜா பட வசூலை விட குறைவாக இருந்ததாக   பேட்டி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அதில், சர்கார் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை மட்டும் 18 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தர் ஒருவர் வாங்கினார். ஆனால் படம் இதுவரை 10 கோடி ரூபாயை தான் வசூலித்து உள்ளது. அதிலும் ஜி.எஸ்.டி.யை எல்லாம் கழித்து பார்த்தால் 6 கோடி ரூபாய் மட்டுமே கையில் இருக்கும்.
 
இப்படம் வெளிவந்த 3 நாட்களுக்கு மட்டுமே வசூலை நன்றாக ஈட்டியது. அதன்பின் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு இல்லை. அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் தான் சீரான வசூலை தருகிறது. சீமராஜா படத்தின் அளவுக்கு கூட சர்கார் லாபகரமான வசூலை தரவில்லை என்றார்.
 
இந்நிலையில் இந்த பேட்டி யூடியுப்பில் வெளியிடப்பட்ட  சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :