தனுஷ், விஜய்சேதுபதியுடன் மோதும் ஓவியா

Last Modified வியாழன், 22 நவம்பர் 2018 (20:56 IST)
கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறை தினத்தில் விஜய்சேதுபதியின் 'சீதக்காதி', தனுஷின் 'மாரி 2' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் ஜெயம் ரவியின் 'அடங்கமறு', 'சிவகார்த்திகேயனின் 'கனா' ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இதே கிறிஸ்துமஸ் தினத்தில் விஷ்ணு, ஓவியா நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படமும் வெளியாகும் என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


செல்லா அய்யாவு இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு, ஓவியா, ரெஜினா, யோகிபாபு, ஆனந்தராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விஷ்ணுவே சொந்தமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :