விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு: டெல்லி செல்லும் நிர்வாகிகள்..!
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, அதன் நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்றும் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை செய்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவது உறுதி என்றும் கூறப்பட்டது.
அது மட்டுமின்றி இந்த இயக்கத்தின் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவருக்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு உரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி பொதுச் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பிப்ரவரி 4-ஆம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran