1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (17:34 IST)

வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து பெற்றாரா விஜய்?

LEo Vijay
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில்,  இன்று, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன்,  சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

விரைவில் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும், தேர்தலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்குமாறும்,  பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்,மக்கள் இயக்க மாவட்ட  தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில்  விஜய் கையெழுத்துப் பெற்றதாக தகவல் வெளியாகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய்யும் அரசியலில் ஈடுபடுவதாக வெளியாகும்  தகவல்கள் அவரது ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.