ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (07:33 IST)

என் அரசியல் நான் எடுக்கும் படங்கள்தான்… இயக்குனர் மிஷ்கின் பதில்!

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக மிஷ்கின் அடுத்தடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, பிசாசு என வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கிய பிசாசு 2 திரைப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது டிரெய்ன் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ராமர் கோயில் திறப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் “என்னுடைய அரசியல் நான் எடுக்கும் படங்கள்தான். அனைத்து காலகட்டத்துக்குமான அரசியலை பேசவேண்டும் என நினைக்கிறேன். மனித அவலம், பிறரை நேசிக்காமல் இருப்பது மற்றும் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது போன்றவற்றை பேசுவதுதான் என்னுடைய அரசியல்” எனக் கூறியுள்ளார்.