புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (20:30 IST)

நேற்றைய 'சர்கார்' கலெக்சன் ரூ.44 லட்சம்.... அதிர்ச்சி தகவல்!

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் இன்னும் ரிலீஸே ஆகவில்லை, அதற்குள் எப்படி ரூ.44 லட்சம் கலெக்சன் என்று நினைப்பவர்களுக்கு இது விஜய்யின் சர்கார் வசூல் செய்த கலெக்சன் இல்லை என்பதும் தமிழக சர்காரின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணம் என்பதும் குறிப்பிடத்தக்கது

தீபாவளி வந்துவிட்டாலே தீபாவளி கலெக்சனுக்கு அரசு அதிகாரிகள் கிளம்பிவிடுவது வாடிக்கையாக உள்ளது. பல தொழிலதிபர்கள் அதிகாரிகளின் இல்லம் அல்லது அலுவலகத்திற்கே ரொக்கத்தை கொண்டு வந்து கொடுப்பதுண்டு

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 24 அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் சோதனையில் ரூ44.30 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பணம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், முனிசிபாலிட்டி ஆலுவலகங்கள், அறநிலையத்துறை அலுவலகங்கள், மாசு கட்டுப்பாட்டு ஆலுவலகங்கள், மற்றும் ஆவின் ஆலுவலகங்களில் நடத்தப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையினர்களிடம் பிடிப்பட்டது சிறிதளவே என்றும் ஒருசிலர் சுதாரித்துவிட்டதால் பிடிபடாமல் இருக்கும் லஞ்சப்பணம் கோடியை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.