செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (17:24 IST)

சர்கார் வெற்றிக்காக காஞ்சி காமாட்சியை வழிபட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

சர்கார் படம் எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றி பெற வேண்டி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் `சர்கார்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது,  தீபாவளிக்கு வெளியாக உள்ளது. 

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அரசியலில் களம் இறங்க உள்ள நடிகர் விஜய் நடித்துள்ள இந்த சர்கார் படம் அரசியல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.இந்நிலையில் டிரெய்லர் வெளியான பின்னர், கதை கரு குறித்த சர்ச்சை ஏற்பட்டது.   .

‘செங்கோல்’ என்ற பெயரில் பதிவுசெய்து வைத்திருந்த கதையை வைத்து எடுக்கப்பட்டதே ‘சர்கார்’ படம் என உதவி இயக்குநர் வருண் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சர்க்கார் கதைக் கரு சர்ச்சையைத் தொடர்ந்து, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதால்,  தற்போது முருகதாஸ் நிம்மதியாக உள்ளார்.
 
இந்த நிலையில், சர்கார் படம் வெற்றியடைய வேண்டி வியாழக்கிழமை காலையில,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு முருகதாஸ் வந்துள்ளார்.  மிகவும் எளிமையாக, யாரையும் கூட்டிவராமல் தனியாகவே முருகதாஸ் வந்துள்ளார்.

அங்கு 10 நிமிடத்தில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.அந்த கோயிலில் இருந்த அர்ச்சகர் ஒருவர்  முருகதாசுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.அந்த புகைப்படம் வெளியான பின்னர் தான் முருகதாஸ், காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சென்றது ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது.