Daily Horoscope
✕

பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலை உண்டா? தமிழக அரசு அறிவிப்பு

Written By Mahendran
Updated: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:36 IST)
பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அதிமுக அதிகரித்திருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 
 
இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை என்று அறிவிப்பு காரணமாக அதிமுக பாஜக போராட்டம் நடத்தியது. அதனடிப்படையில் கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அதிமுக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் அமைச்சர் காந்தி செய்தியாளர்களை சந்தித்த போது பொங்கல் பரிசுத் தொகுப்பில் கண்டிப்பாக வேட்டி, சேலை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கம்போல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி சேலை உண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அட்மிஷன் முதல் தேர்வு முடிவுகள் வரை அனைத்தும் ஆன்லைனில்.. கல்லூரி மாணவர்கள் நிம்மதி...

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் தோல்வி.. 3வது நாளில் 60 கடைகள் மட்டுமே மூடல்.. சஸ்பெண்ட் பயமா?

மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வைத்து பீக் ஹவரில் விநியோகம்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்...

தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி.. தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments