வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜனவரி 2021 (18:35 IST)

ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!

ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் முருங்கைக்காய் விலை ஒரு கிலோ 300 ரூபாய் என்ற தகவல் பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் பல பகுதிகளில் காய்கறி விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து குறைவாக இருந்ததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நாகர்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ 300 ரூபாய்க்கும் வெள்ளரிக்காய் விலை 120 ரூபாய்க்கும் விற்பனை ஆவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
முருங்கைக்காய் விலை திடீரென உயரம் என்ன காரணம் என்பது புரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முருங்கைக் காய் வெள்ளரிக்காய் மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலை ஏறிக் கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது