வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (22:46 IST)

பிரபல தயாரிப்பாளர் நடிகராகிறார்....யார் படத்தில் தெரியுமா ?

நடிகை வனிதா மூன்றாவது திருமணம் குறித்த விமர்சனத்தில் மீடியாவில் கவனம் பெற்றவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா என்ற பெயரில் பல சினிமாக்களைத் தயாரித்துள்ளார்.

இவர் தற்போது 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இதில், சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் மனோன் பாலா மற்றும் யோகிபாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.