வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (12:22 IST)

மழையின் காரணமாக எகிறிய காய்கறி விலை!

தமிழக அரசின் நுகர்வோர் பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ தக்காளி 40 முதல் 45 க்கு சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையின் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக 7000 டன் அத்தியாவசிய காய்கறி வருகை உள்ள நிலையில் இன்று 4000 டன் மட்டுமே வந்தது. இதனால் தக்காளி 1 கிலோ 60, முருங்கைக்காய் 1 கிலோ 100-க்கும், கேரட் 1 கிலோ 100-க்கும், எலுமிச்சை 1கிலோ 100-க்கும் விலை அதிரடியாக உயர்ந்தது.

அதேபோல் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட புதினா கொத்தமல்லி 15 ருபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் நுகர்வோர் பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ தக்காளி 40 முதல் 45 க்கு சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறியின் நிலை இதுவென்றால் கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை தமிழகத்தில் பல மாவட்ட மக்களால் கொண்டாடப்படுகிறது. நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. முல்லை கிலோ ரூ.1200, ரோஜா ரூ.200, ஆரஞ்சு செவ்வந்தி ரூ.200, மஞ்சள் செவ்வந்தி ரூ.160, துளசி ரூ.60, மரிக்கொழுந்து ரூ.50, அரளிப்பூ ரூ.250 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.