திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (21:02 IST)

தமிழகத்தில் ஜி.எஸ்.டி கூட்டம் நடந்தால் போராட்டம் செய்வோம்: விக்கிரமராஜா

vikramaraja
தமிழகத்தில் ஜிஎஸ்டி கூட்டம் நடந்தால் போராட்டம் செய்வோம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் 25வது வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இதில் வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர்
 
இந்த கூட்டத்தில் அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநில அரசு செஸ் வரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது 
 
மேலும் தமிழகத்தில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றால் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது