Daily Horoscope

சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயிலில் திடீரென கேட்ட சத்தம்.. பயணிகள் அலறல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (13:55 IST)
சென்னை மைசூர் வந்தே பாரத் ரயிலில் திடீரென சத்தம் கேட்டதால் பயணிகள் அலறி அடித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை மைசூர் வந்தே பாரத் ரயில் இன்று ஆம்பூர் அருகே  சென்று கொண்டிருந்த போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்ததாக தெரிகிறது. சி11 என்ற பெட்டியில் பயணம் செய்த பயணியின் செல்போன் சார்ஜில் போடப்பட்டிருந்த நிலையில் அந்த செல்போன் திடீரென வெடித்தது.
 
மேலும் செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்தனர். இதனை அடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
 
அதன் பின்னர் பெட்டிகளின் கதவு திறக்கப்பட்டு முழுவதும் புகை வெளியேற்றப்பட்டது பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற பின்னர் 35 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.
 
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. செல்போன் வெடித்த சம்பவம் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments