திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:52 IST)

நீட் விலக்கு மசோதா அவசியம் இல்லாத ஒரு மசோதா: வானதி சீனிவாசன்

நீட் விலக்கு மசோதா தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு மசோதா என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
 
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
இது குறித்து பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் ஆவேசமாக பேசி வருகின்றனர் என்பதும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழ்நாட்டின் பாடத் திட்டம் மாற்றப்பட்டு நீட் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாநிலமாக மாறி வருகிறது 
 
ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவசியம் இல்லாத ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர் என்றும் அதனால்தான் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.