தொடர்புடைய செய்திகள்
- உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை.. சென்னையில் இன்றைய நிலை என்ன?
- புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!
- ரூ.60 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்.. இன்று ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!
- தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை ஒரு சவரன் எவ்வளவு?
- தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரே நாளில் 120 ரூபாய் உயர்ந்தது..!
தங்கம் விலை மீண்டும் குறைவு.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீப நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. நேற்றைய விலையில் இருந்து இன்று தங்கம் ஒரு கிராம் 15 ரூபாயும் ஒரு சவரன் 120 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 7,540 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 60,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8225 எனவும் ஒரு சவரன் ரூபாய் 65,800 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
