Daily Horoscope
✕

டெல்லி அரசியலுக்கு செல்வீர்களா?...குஷ்புவை பேசவிடாத வானதி சீனிவாசன்!

Updated: வெள்ளி, 12 மார்ச் 2021 (15:50 IST)
பத்திரிக்கையாளர் சந்திப்பில் குஷ்புவை பேசவிடாமல் வானதி சீனிவாசனே பேசி பதிலளித்துள்ளார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் குஷ்பூ போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கும், கௌதமி போட்டியிட திட்டமிடப்பட்டிருந்த ராஜபாளையம் தொகுதி அதிமுகவுக்கும் சென்றுள்ளதால் இருவரும் படு ஏமாற்றமடைந்துள்ளனர். இதுவரை மூன்று கட்சிகளுக்கு மேல் தாவியும் குஷ்புவால் ஒரு சீட் கூட வாங்க முடியவில்லை என்று கேலிகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குஷ்புவிடம் கேட்டபோது ‘நான் தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு வரவில்லை. கட்சியை நம்பிதான் வந்தேன். இந்த முறை எங்கள் கூட்டணி வெற்றி பெறும்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் டெல்லி அரசியலுக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதிலளிக்க முனைந்த போது குறுக்கிட்ட வானதி சீனிவாசன் ‘அதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். யாருக்கு என்ன பொறுப்புக் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்’ எனக் கூறினார்.
 

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments