திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (07:09 IST)

நமீதா, குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைந்த மேலும் ஒரு நடிகை!

நமீதா, குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைந்த மேலும் ஒரு நடிகை!
தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பலர் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகைகள் குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் தற்போது பாஜகவில் உள்ளனர் என்பதும் அவர்களில் பலருக்கு பாஜகவில் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்து உள்ள நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகை ராதா. பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன் ரஜினிகாந்த் சத்யராஜ் பிரபு சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ராதா என்பது குறிப்பிடத்தக்கது,.
 
நமீதா, குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைந்த மேலும் ஒரு நடிகை!
நமீதா, குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைந்த மேலும் ஒரு நடிகை!
நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவருடைய முன்னிலையில் நடிகர் ராதா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் அவர் வரும் தேர்தலில் கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே நடிகர் தேவன் நேற்று பாஜகவில் தன்னை அமித்ஷா முன்னிலையில் இணைத்து கொண்டார் என்பதை பார்த்தோம்