1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்த குஷ்பு!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே 
 
மேலும் பாஜக தரப்பில் போட்டியிடப் போகும் உத்தேச வேட்பாளர் பட்டியலும் சமீபத்தில் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உத்தேச பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது 
 
இதனை உறுதி செய்யும் வகையில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் இன்று தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பிரதமர் மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார் என்றும் அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்றும் அவர் சென்னை சேப்பாக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார்.
 
மேலும் பாஜக தனது முதல் எம்எல்ஏ கணக்கை சேப்பாக்கம் தொகுதியில் இருந்து தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்