கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகு அல்ல: குஷ்பு
கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகு அல்ல
கடலில் குளிப்பது , குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகல்ல என ராகுல் காந்தி குறித்து நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடலில் மீனவர்களுடன் குதித்தார் என்பதும் மாணவி ஒருவருக்கு இணையாக குஸ்தி எடுத்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் கடலில் குதிப்பது, குஸ்தி எடுப்பது நல்ல தலைவருக்கு அழகானதல்ல என ராகுல் காந்தி குறித்து குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்
என்ன திட்டத்தை கொண்டு வருவோம் என மக்களிடம் சொல்ல வேண்டும் என்றும் நிதி ஆண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் எரிபொருள் உயர்வது இயல்பு என்றும் குஷ்பு கேள்வி ஒன்றுக்கு பதிலாக தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியில் ஒருசில ஆண்டுகள் இருந்த குஷ்பு, ராகுல் காந்தியை இவ்வாறு கேலி செய்து விமர்சனம் செய்வதை தவிர்க்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்