திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (11:17 IST)

நான்கு மலைகளை இடம்பெயர்த்து நட்டிருக்கும் மு.க.ஸ்டாலின்: வைரமுத்து

தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும், பொருளாளராக டிஆர் பாலு அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சற்று முன்னர் கூடிய தி.மு.க பொதுக்குழுவில் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி மற்றும் ஆ.ராசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக திமுக தலைமை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து துரைமுருகன், டிஆர் பாலு, பொன்முடி மற்றும் ஆ.ராசா ஆகிய நால்வருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நால்வரின் நியமனம் குறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் நான்கு மலைகளை இடம்பெயர்த்து நட்டிருக்கும் தலைவர் மு க ஸ்டாலின் பாராட்டுக்குரியவர் என்று குறிப்பிட்டுள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், பொருளாளர் அண்ணன் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அண்ணன் க.பொன்முடி, சகோதரர் ஆ.ராசா நால்வரும் வாழ்த்துக்குரியவர்கள். மலர்ச்செடிகளைப்போல நான்கு மலைகளை இடம்பெயர்த்து நட்டிருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர். கவியரசு வைரமுத்துவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது