தமிழ வளர்க்க யார் டி-சர்ட் போட்டது? பல்ப் கொடுத்த உதயநிதி!!
உதயநிதி ஸ்டாலின் நாங்கள் தமிழ் வளர்க்க டி-சர்ட் போடவில்லை என பாஜக வானதி சீனிவாசனுக்கு பல்ப் கொடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினகங்களுக்கு முன் இந்தி திணிப்பிற்கு எதிரான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகியது. திரைப்பிரபலங்கள் பலர் இந்திக்கு எதிரான வாசகங்களை அடங்கிய டீசர்ட்டுகளை அணிந்து புகைப்படம் பதிவிட்டதால் சமூக வலைதளங்களில் “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது.
இது குறித்து பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், மொழி திணிப்பை எப்போதும் பாஜக ஆதரித்தது கிடையாது. கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்வதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
டிஷர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது. திமுகவினர் டிஷர்ட்டில் தமிழ் வளர்ப்பதை விடுத்து தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வானதி சீனிவாசன் கூறியது போல தமிழை வளர்க்க டி-ஷர்ட் அணிந்தீர்களா என கேட்டபோது, தமிழை வளர்ப்பதற்கு டி-ஷர்ட் போடவில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே டிஷர்ட் போட்டோம் என்று விளக்கமளித்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதேபோன்று டி-ஷர்ட்டை அணிந்து கானொளிக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.